அமராவதி, இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து நடத்தும் 'ஸ்லினெக்ஸ் - 26' கூட்டு கடற்படை பயிற்சியின் 13-வது பதிப்பு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி, நாளை வரை நடைபெற உள்ளது. இந்திய போர்க்கப்பல்கள் பங்கேற்பு இரு நாடுகளுக்கும் இடையேயான கடல்சார் உறவை பலப்படுத்தும் இந்த பிரம்மாண்ட பயிற்சியில், இந்திய கடற்படையின் சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் கவரட்டி' மற்றும் கடற்படை எரிபொருள் நிரப்பும் கப்பலான 'ஐஎன்எஸ் ஜோதி' ஆகியவை பங்கேற்றுள்ளன. இலங்கை கடற்படை சார்பில் 'எஸ்எல்என்எஸ் சிந்துராலா' போர்க்கப்பல் இதில் களமிறக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே கடல்சார் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த பயிற்சி உருவெடுத்துள்ளது. கடல்சார் ஒத்துழைப்பு இந்தியாவின் 'மகாசாகர்' தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் சூழலை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த பயிற்சி மேலும் வலுப்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/india-sri-lanka-bilateral-naval-exercise-concludes-tomorrow




