செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவரால் நடக்க முடியாது. மாற்றுத்திறனாளியான மாணவி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மாணவியை மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டிருக்கிறார். உடனே மாணவி சத்தம் போடாமலிருக்க அவரின் வாயை துணியால் பொத்தியிருக்கிறது கும்பல். பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. தனக்கு நடந்த கொடுமையால் கதறி அழுத மாணவி, பெற்றோர் வந்த பிறகு விவரத்தைக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இந்தச் சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பாலியல் தொல்லை அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவியிடம் விசாரித்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுராந்தகம் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் மாணவியின் பெற்றோரைச் சந்திக்க சில சமூக நல ஆர்வலர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. எனவே மாணவி விவகாரத்தில் செங்கல்பட்டு போலீஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் விடுத்திருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/child-abused-in-chengalpattu-mathuranthagam




