பிரபல மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் உள்ள 'ப்ராட் பீக்' மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக 'எலைட் எக்ஸ்பெட்' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் உள்ள அமைந்துள்ள 'ப்ராட் பீக்' சிகரம் உலகின் 12வது மிக உயரமான சிகரம். நிர்மல் புர்ஜா இங்கு நேற்று முன்தினம் (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கரப் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில்தான் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக அவரது 'எலைட் எக்ஸ்பெட்' நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இவருடன் சேர்த்து மலையேற்ற வீரர்கள் பலரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் பனிச்சரிவு நடந்த பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். யார் இந்த நிர்மல் புர்ஜா? நேபாளத்தில் பிறந்தவரான நிர்மல் புர்ஜா, ஆரம்பத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகுப் படையிலும் (SBS) சேவையாற்றியவர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டில், உலகிலுள்ள 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 14 பிரமாண்ட சிகரங்களை 6 மாத காலத்திற்குள் ஏறி உலக சாதனையைப் படைத்தார். நிர்மல் புர்ஜா இவருடைய இந்தச் சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/mountaineer-nirmal-purja-dead-in-pakistan-avalanche-says-his-company




