Vollständiger Artikel
முதல்வர் விஜய் கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. Vijay கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்திருந்தார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது உடனடியாக சென்னைக்கு கிளம்பி வந்த விஜய், ஒரு மாதம் கழித்து இறந்தவர்களின் குடும்பங்களை மகாபலிபுரம் வரவழைத்து தனியார் விடுதியில் வைத்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியிருந்தார். TVK Vijay - தவெக விஜய் தவெக தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்ட நிலையில், முதல்வர் விஜய் எப்போது கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கப்போகிறார்? எனும் கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் விமர்சனமும் ஆனது. இந்நிலையில் வரும் ஜூலை இரண்டாம் வாரத்தில் முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அத்தனை குடும்பத்தினரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



