மாஸ்கோ, ரஷியாவில் எல்பிரஸ் மலை உள்ளது. ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள இம்மலையில் ஏற உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் வருகின்றனர். இந்நிலையில், போஸ்னியா நாட்டை சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் எல்பிரஸ் மலையில் ஏறியுள்ளனர். மலையேற்ற வீரர்கள் நேற்று 5 ஆயிரத்து 350 உயரத்தில் மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென பனிப்புயல் வீசியது. இதில் மலையேற்ற வீரர்கள் 7 பேரும் சிக்கிக்கொண்டனர். 5 பேர் பலி இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 2 மலையேற்ற வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதில், 2 மலையேற வீரர்களின் உடல்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 மலையேற்ற வீரர்களின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மோசமான வானிலை காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்கும்பணி தாமதாமாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/five-bosnian-climbers-feared-dead-on-russias-mount-elbrus




