ஸ்லோவாக்கியா, ஸ்லோவாக்கியாவில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டுக்கான யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதான இந்திய வீராங்கனை காஜல் தோசாக், தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 76 கிலோ பிரிவில் காஜலுக்கு தங்கம் மகளிர் 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் ஜிங்ரூ சுனை எதிர்கொண்ட காஜல் தோசாக், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக செயல்பட்ட அவர், சீன வீராங்கனையை 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தொடர்ந்து தங்கம் வென்று வரும் காஜல் காஜல் தோசாக்கிற்கு இது முதல் உலக சாம்பியன்ஷிப் தங்கம் அல்ல. ஏற்கனவே 2024-ம் ஆண்டு யு17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 69 கிலோ பிரிவிலும், 2025-ம் ஆண்டு யு20 உலக சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ பிரிவிலும் அவர் தங்கம் வென்றுள்ளார். தனு சர்மாவுக்கு வெள்ளி மேலும், இந்தியாவின் தனு சர்மா மற்றும் சவிதா ஆகியோர் தங்களது பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். மகளிர் 72 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் தனு சர்மா, ஜப்பானின் சிசாடோ யோஷிடாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் தனு சர்மா கடுமையாகப் போராடியபோதிலும், 3-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். சவிதாவுக்கும் வெள்ளிப் பதக்கம் மகளிர் 62 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சவிதா, ஜப்பானின் சகுரா ஓனிஷியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் சவிதா 2-12 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவுக்கு மேலும் பதக்க வாய்ப்பு யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு இன்னும் பல பதக்க வாய்ப்புகள் உள்ளன. மகளிர் பிரிவில் 57, 59 மற்றும் 68 கிலோ எடைப்பிரிவுகளிலும், ஆண்களுக்கான பிரீஸ்டைல் பிரிவில் 61 மற்றும் 86 கிலோ எடைப்பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் வரும் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மேலும் பல பதக்கங்களை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/othersports/kajal-dhochak-wins-gold-as-india-bag-two-silver-medals-at-u20-wrestling-worlds




