புதுச்சேரி, வடகிழக்கு பருவமழையையொட்டி புதுச்சேரியில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 2026-ம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருகிறது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் உயிர், சொத்துக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய உலகளாவிய காலநிலை மதிப்பீடுகள் எல் நினோ தாக்கம் வலுவடைந்து வருகிறது. வரவிருக்கும் பருவமழை காலத்தில் எதிர்பார்க்கப்படும் வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு கூடுதல் ஆயத்த மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கட்-அவுட், பேனர்கள் எல் நினோ தாக்கத்தால் வடகிழக்குப் பருவமழை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. (அதேவேளையில், உண்மையான மழையின் அளவு பல்வேறு வளிமண்டல மற்றும் பெருங்கடல் காரணிகளைப் பொறுத்தது) மேலும், ராஜா தியேட்டர் சிக்னல் அருகே சமீபத்தில் காற்று மற்றும் மழையால் பேனர்கள் சரிந்து விழுந்தன. பேனர்கள், கட் அவுட்டுகள் சரியாகக் கட்டப்படாவிட்டால், மோசமான வானிலையின் போது காற்றில் பறந்தோ அல்லது சரிந்தோ பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. தடை எனவே பொது அல்லது தனியார் இடங்கள் சாலை ஓரங்கள் மற்றும் சாலைத் தடுப்புகளில் அனைத்து வகையான பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஏற்கனவே வைக்கப்பட்டு இருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும். இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை, போலீஸ் சூப்பிரண்டு, அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்த விதமான முன்அறிவிப்பும் இன்றி அவை அகற்றப்படும். அகற்றுவதற்கான செலவு விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். 2026 வடகிழக்குப் பருவமழை முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/ban-on-banners-cutouts-and-billboards-in-puducherry-effective-today




