திருநெல்வேலி, திருநெல்வேலி கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 108 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தண்ணீர் திறந்து விட உத்தரவு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி கிராமத்தில், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளான 2,548.94 ஏக்கர் நிலங்களுக்கு கார் பருவ சாகுபடி செய்வதற்கு 16.07.2026 முதல் 31.10.2026 முடிய 108 நாட்களுக்கு, வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவு. வடமலையான்கால் நீர்த்தேக்கத்திலிருந்து கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கும் சேர்த்து வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டத்தில் உள்ள 5,780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-tamil-nadu-government-orders-the-release-of-water-from-kodumudiaru-reservoir-for-108-days




