தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையத்தில் உடும்பை விற்பனை செய்ய முயன்றதாக 24 வயது வாலிபரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். வனவிலங்குகள் விற்பனை என ரகசிய தகவல் பென்னாகரம் பஸ் நிலையத்தில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பென்னாகரம் பஸ் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். உடும்புடன் சிக்கிய வாலிபர் அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த பென்னாகரம் போடூர் இருளர் காலனியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து உடும்பை பிடித்து வந்து, அதனை விற்பனை செய்ய முயன்றதாக தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த வனத்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனப்பகுதியில் இருந்து உடும்பை பிடித்து வந்து விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/man-arrested-in-dharmapuri-for-attempting-to-sell-a-monitor-lizard




