Vollständiger Artikel
மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியனின் ராஜினாமாவிற்குப் பிறகு, மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து பேச்சுகள் எழுந்துகொண்டே உள்ளன. சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜார்ஜ் குரியன். இவரிடம் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் கூடுதல் பொறுப்பும் இருந்து வந்தது. அவருடைய ராஜ்ய சபா பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஜார்ஜ் குரியன். மேலும், இன்னொரு மத்திய இணையமைச்சரான ரவ்னீத் சிங் பிட்டுவின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், இவரது அமைச்சர் பதவியும் காலியாகிறது. பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்முதொடரும் நெல் மூட்டைகளில் முளைப்பு பிரச்னை: தடுப்பதற்கான 6 தீர்வுகள் இதோ! சந்திப்புகள் இந்த இரு அமைச்சரவை காலியாவதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் மாறுதல்கள் ஏற்படலாம் என்கிற பேச்சுகள் அடிபட்டன. இந்தப் பேச்சுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த 23-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார் பிரதமர் மோடி. அடுத்த இரண்டு நாள்களிலேயே (ஜூன் 25, 2026) முர்முவை சந்தித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தர்மேந்திர பிரதான்... இந்த நேரத்தில் நீட் வினாத்தாள் கசிந்ததையொட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கிறது. மோடியும் தர்மேந்திர பிரதான் மீது அதிருப்தியாக இருப்பதாகவும், அதனால், பிரதானின் அமைச்சர் பதவி பறிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது. ரவிக்குமார் பதிவு இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு முக்கிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். கல்வி அமைச்சர் ஆகிறார் என்கிறார்கள். வாழ்த்துகள் !! https://t.co/fQxUOml1QI — Dr D.Ravikumar MP (@WriterRavikumar) June 29, 2026 கடந்த 26-ம் தேதி ரவிக்குமாரின் பதிவு: "திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சர் ஆக்கப்படப்போவதாக செய்திகள் கசிகின்றன. அது உண்மையா? மோடி அரசின் படுதோல்வித் திட்டமான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு ( demonetisation ) நடவடிக்கையின் நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியாவின் பொருளாதார நிலை என்ன ஆகுமோ!" நேற்று நிர்மலா சீதாராமனை சுட்டிக்காட்டி, "கல்வி அமைச்சர் ஆகிறார் என்கிறார்கள். வாழ்த்துகள்!!" என்று பதிவிட்டுள்ளார் ரவிக்குமார். அரிசி, மசாலா, மாம்பழத்திற்கு 'நோ' - இந்திய விவசாய ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் நிராகரிக்கப்படுவது ஏன்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten




