சென்னை, “வி த லீடர்ஸ்” இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். துரித நடவடிக்கை இந்த துயரமான விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வரவும், துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vietnam-boat-accident-annamalai-expresses-deep-condolences-to-the-families-of-the-deceased




