பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் சேதுபதி, வெள்ளதுரை, ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் அன்வர்தீன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இதில் நேற்று சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று சரணடைந்தார். மதுரை மத்தியச் சிறை இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை மத்திய சிறையில் இருக்கும் அன்வர்தீன் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து போயுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. பழனியை சேர்ந்த அன்வர்தீன் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/person-arrested-in-palani-mutt-land-fraud-case-dies-in-prison




