ஆரோக்கியம் தொடர்பாக காலங்காலமாக நம்மிடையே பல நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் உண்மைத்தன்மை அறியாமல் கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். கண்டது, கேட்டது என நம்மைத் தேடி வரும் ஆரோக்கிய அறிவுரைகளை எல்லாம் அப்படியே நம்புவதும் பின்பற்றுவதுமே செய்து வருகிறோம். 8 டம்ளர் தண்ணீர் பல காலமாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஆரோக்கிய அறிவுரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை. எவற்றை பின்பற்றலாம். எவற்றை தவிர்க்க வேண்டும் என சிலவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் நலனை பேணுவதற்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. சிறந்தது இந்தநிலையில், தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கு பலரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் குடிக்கும் தண்ணீரின் வெப்பநிலையையும், தன்மையையும் கவனத்தில் கொள்வதில்லை. சுடுநீர், குளிர் நீர், சாதாரண நீர் இவற்றை பருகுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், எந்த தண்ணீரை எப்போது பருகுவது சிறந்தது என்றும் பார்ப்போம். மிகவும் குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்): செரிமானத்தை மெதுவாக்கி, உணர்திறன் மிக்க தொண்டைகளை எரிச்சலூட்டக்கூடும். குளிர்ந்த நீர்: புத்துணர்ச்சியாக உணரவைக்கும். இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பது செரிமானத்தை மெதுவாக்கக்கூடும். சிலருக்கு அசவுகரியத்தை உண்டாக்கும். அறை வெப்பநிலையில் உள்ள நீர்: உடலில் நீர்ச்சத்தை சீராக பேணவும், செரிமானத்தை எளி தாக்கவும் உதவும். வெதுவெதுப்பான நீர் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவும். செரிமானத்திற்கும் உதவிடும். எப்போது பருகலாம்? காலைப்பொழுதில் வெதுவெதுப்பான சுடுநீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள நீரை பருகுங்கள். எப்போதாவது குளிர்ந்த நீரை குடியுங்கள். உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் சீராக இயங்குவதற்கு நீர் உதவுகிறது. எப்போது தவிர்க்க வேண்டும்? அதிக அளவு உணவு சாப்பிட்டால் குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும்.அதிக அளவு உணவு சாப்பிட்டால் குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/which-water-is-best-to-drink-and-when




