தூத்துக்குடி, தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-the-day-after-tomorrow-2




