சென்னை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ரமேஷ் முன்பு ஜாமீன் மனு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்கு முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) நீதிபதி படித்து பார்த்த போது, அதில் குற்றம் சாட்டப்பட்டவரின் முகவரியில் சாதி பெயருடன் கூடிய தெரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, தெருக்கள், சாலைகளில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசு மற்றும் ஐகோர்ட்டு பல உத்தரவுகள் பிறப்பித்தும் தெருக்களின் பெயரில் சாதிப் பெயர்கள் இன்னும் இடம்பெற்றுள்ளது வேதனைக்குரியது. எனவே, தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற நவம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/terukkalin-peyiril-saathi-thaamakamunvandhu-visaranaiyil-arasuku-aikorttu-utharavu




