திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகம், மருதகுளம் அருகே தனியார் கல்லூரி பகுதியில் 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 வடமாநில தொழிலாளர்களை கைது செய்தனர். போலீசார் சோதனை திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பகுதியில் 23.7.2026 அன்று மதியம் 1.30 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ஸ்ரவன்பஸ்வான் (வயது 37), ஷேக்சமீர்(26) ஆகிய 2 பேரை சோதனை செய்தனர். வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது, கஞ்சா பறிமுதல் அப்போது அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 130 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மூன்றடைப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ஸ்ரவன்பஸ்வான், ஷேக்சமீர் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-northern-state-workers-arrested-for-selling-ganja-near-college




