புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு சென்ற வில்லியனூரைச் சேர்ந்த ரௌடி வினோத், இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அத்துடன் அந்தப் பகுதியிலுள்ள மற்ற கடைகள் அனைத்திலும் மாமூல் வசூலித்து தன்னிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி, இரவு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் ரௌடி வினோத். சேதமடைந்தப் பொருட்கள் அதன்படி மீண்டும் இரவு 8.30 மணிக்குச் சென்ற ரௌடி வினோத், பாபுவிடம் மாமூல் கேட்டிருக்கிறார். ஆனால் பாபுவும், ராஜேந்திரனும் அதற்கு மறுத்ததுடன், போலீஸாரிடம் புகாரளிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர். அதற்கு, `போலீஸ்னா பயந்துடுவேனா… அவங்களே எனக்கு பயப்படுவாங்க. எம்.எல்.ஏ, முதலமைச்சர்னு நீ யாருகிட்ட வேணும்னாலும் போ. எனக்கு எந்த பயமும் இல்ல. எனக்கு மாமூல் வசூலிச்சிக் குடுக்காம நீ எப்படி தொழில் செய்வாய் என்று பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாகச் சென்றிருக்கிறார் வினோத். சிறிது நேரத்தில் திரும்பி வந்து ஒரு பையில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ந்து போன ராஜேந்திரனும், பாபுவும் `நாங்க பணம் கொடுக்கிறோம். அதை கடைக்குள் போடாதே…' என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ரௌடி வினோத், அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகளை கடைக்குள் வீசியிருக்கிறார். அது வெடித்துச் சிதறிய சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அதேசமயம் கடைக்குள் இருந்த ராஜேந்திரன், பாபு மற்றும் அவரது மனைவி மூவரும் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். கடைக்குள் இருந்த அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்துக் கடைக்காரர்கள், அந்தத் தீயை அணைத்தனர். ரௌடி வினோத் தகவலறிந்து அங்கு சென்ற வில்லியனூர் காவல் நிலைய போலீஸார், பாபு மற்றும் ராஜேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அவர்கள், தப்பிச் சென்ற ரௌடி வினோத்துக்கு வலை வீசினர். அப்போது புதுச்சேரி நகரப்பகுதியில் இருந்த வினோத்தை ஒரு மணி நேரத்துக்குள் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அப்போது வினோத்துக்கு கைமுறிவு ஏற்பட்டதால், அவருக்கு மாவுக்கட்டுப் போடப்பட்டது. ரௌடி வினோத் மீது கஞ்சா விற்பனை, அடிதடி என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கள்ளக்குறிச்சி: தனக்குத் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகம் - இந்து மகா சபா நிர்வாகி மீது குண்டாஸ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/in-puducherrya-rowdy-hurled-3-petrol-bombs-into-the-shop-of-a-merchant-who-refused-to-pay-extortion-money




