பிரேசிலா, பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. பிரேசில் அதிபர் தேர்தல் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் அதிபராக லுலா டி சில்வா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டி சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் மகன் பிளவியோ நண்டெஸ் போல்சனேரோ உள்பட 12 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேட்பாளர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறவேண்டும். எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்குமேல் வாக்குகளை பெறாத பட்சத்தில் அதிக வாக்குகளை பெறும் முதல் 2 வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும். அந்த தேர்தல் வரும் 25ம் தேதி நடைபெறும். அதேவேளை, அதிபர் தேர்தலுடன் சேர்த்து இன்று மாகாண கவர்னர்கள், மாகாண மந்திரிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. சுமார் 16 கோடி வாக்காளர்கள் இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் ஆவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/brazil-presidential-vote-pits-trump-ally-against-lula-who-is-seeking-4th-nonconsecutive-term




