கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. தனலட்சுமி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் கடவூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கும், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணம் மீறிய உறவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவன் -மனைவி இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து பிரச்னை ஏற்பட, அதன்காரணமாக தனலட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். rajalingam, thanalatchumi இந்த சூழலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனலட்சுமியும், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி என்பவரும் இரவு நேரத்தில் காரில் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இது குறித்து, ராஜலிங்கம் தனது மனைவி தனலட்சுமியிடம், முத்துசாமியிடமும் கேட்டபோது, தன்னை லாரி ஏற்றி கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ராஜலிங்கம் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் அவரது புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஜலிங்கம் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக அவரது மனைவி தனலட்சுமி உறவினர்கள் மற்றும் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி ஆகியோர் மீண்டும் அவரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த ராஜலிங்கம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அவரது குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். poster இந்நிலையில், ராஜலிங்கம் தான் விஷம் அருந்துவதற்கு முன்பாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி, மனைவி மற்றும் முத்துசாமி இருவரது தவறான உறவு குறித்து கூறி கண்ணீர் மல்க பேசும் வீடியோ வெளியானது. இந்நிலையில், ராஜலிங்கத்தின் மனைவி தனலட்சுமி, கரூர் எஸ்.பி-யிடம் ராஜலிங்கம் மீது புகார் கொடுத்ததோடு, "ராஜலிங்கத்துக்கும், மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு. ஒரே கட்சியில் இருப்பதால் முத்துசாமியோடு என்னை தவறாக தொடர்புபடுத்தி ராஜலிங்கம் அவதூறு பரப்புகிறார்' என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கணவர் மற்றும் மனைவி இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி புகார் கொடுத்திருப்பது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/husband-attempt-suicide-after-complaining-about-his-wife-in-karur




