சென்னை, அரசாணை வெளியீடு ஆர்.டி.ஐ. சட்டத்தில் இருந்து பொது துறையிலுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், பொது துறையின் கீழுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உளவு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விசாரணை ஆணையம் தொடர்பான நியமனங்கள், வகுப்புவாத, சாதிய மோதல்கள், காவல் துறையின் கைது நடவடிக்கைகள், போலீஸ் காவல், கைதிகளின் மரணம், போலீஸ் விசாரணை அறிக்கைகள் பெறுவதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும். சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர சீராய்வு கூட்டம், தலைமை செயலாளர் அறிவுறுத்தலின் பேரிலான சிறப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை பெறுவதிலும் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். தகவல்களை பெற முடியாது. இதன்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள், மாணவர், விவசாயி மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் போராட்டம், அவதூறு கட்டுரைகள், செய்தி துணுக்குகள், பேச்சுகள் உள்ளிட்ட விசயங்கள் தொடர்பான தகவல்களையும் பெற முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்கு விசயத்தில், அனைத்து தகவல்களையும் மக்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்து, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விசயத்தில், இந்த முக்கிய முடிவை தமிழக அரசு எடுத்தது. ஆர்.டி.ஐ.யில் சட்டம் ஒழுங்குக்கு விலக்கு அளித்ததற்கு தவெக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்டு மற்றும் பிற கட்சிகளான திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தன. வாபஸ் இந்த நிலையில், பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று வெளியிடப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-withdrawn-the-exemption-granted-to-law-and-order-matters-under-the-rti-act




