புதுடெல்லி, பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன. 2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. “வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்ற கருப்பொருளில் தலைமைப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்தியா, ஏற்கனவே 2012, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. தற்போது 4-வது முறையாக 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. மேலும், பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாளர் நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் 11-ந்தேதி(வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்கள் வார விடுமுறை நாட்களாகும். பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/holiday-for-government-offices-in-delhi-on-the-11th-due-to-the-brics-summit




