மும்பை காவல் துறையில் இல்லாத ஒருவரை இருப்பது போன்று காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையில் இல்லாத 10 பேர் உத்தியோகபூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாக பலமுறை காட்டப்பட்டு, அவர்களின் கணக்கில் மாதாந்திர சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. விசாரணையில் சம்பள பரிவர்த்தனைகள் முதன்மையாக டிசம்பர் 2019 முதல் பிப்ரவரி 2020 மற்றும் ஜூன் முதல் செப்டம்பர் 2020 வரை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், ரூ.6.5 கோடி சம்பளம் பட்டுவாடாவும் நடந்திருக்கிறது. 10 நபர்கள் உண்மையான பணியாளர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க, வருகைப் பதிவேடுகள் மற்றும் பிற பதிவுகளை உருவாக்குவதற்கு கிளார்க் நிலை ஊழியர்கள் ஒத்துழைத்து இருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதில் நிர்வாகம் மற்றும் சம்பள பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னாள் நிர்வாக அதிகாரிகளான ராம்கிஷன் கோஸ்வாமி, நாகேஷ் தல்வடேகர் மற்றும் விஜய சவான் ஆகியோருடன் தலைமை எழுத்தர் அஜய் ரத்தோட் மற்றும் மூத்த எழுத்தர் அமோல் மெஷ்ராம் ஆகியோர் பெயரும் சந்தேகிக்கப்படுகிறது. போலியான பணி அடையாள அட்டைகள் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட அடையாளங்களை வரையறுத்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ராம்தாஸ் போக்லே, சுதாகர் கடம், சர்ஜு யாதவ், பகவத் போசலே, குணாஜி காவ்கர், மகாதேவ் ஹல்டன்கர், ராஜேந்திர சோனார், உத்தம் தோரட், சூர்யகாந்த் பாட்டீல் மற்றும் பாண்டுரங் கடம் ஆகிய 10 கற்பனை ஊழியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. போலீஸ் துறையில் நடந்துள்ள இந்த ஊழல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/trending/65-crore-in-salaries-paid-to-10-non-working-police-personnel-in-mumbai




