சென்னை, ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறிஸ்தவ பயனாளிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37 ஆயிரம் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதமும் ஈ.சி.எஸ். முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டுக்கு பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம். மேலும், என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 2027 ஜனவரி 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/christian-pilgrims-returning-from-jerusalem-can-apply-for-subsidy




