டெல்லி, 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கியுள்ளார். அதன்படி இன்று முதல் வரும் 11ம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேசியா பயணம் அதன்படி, சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்பட்டு சென்றார். இந்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தோனேசியாவில் வாழும் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுகிறார். இதையடுத்து, அதிபர் பிரபோவாவுடன் சேர்ந்து தெற்கு ஜாவாவில் உள்ள பிரபலமான இந்து மத கோவிலான பிரம்பானான் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இந்தோனேசிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்கிறார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி நியூசிலாந்து செல்கிறார். இதையடுத்து, 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி 11ம் தேதி நாடு திரும்புகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/pm-modi-departs-for-indonesia-from-new-delhi




