பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் பணமோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் 8வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்றவர் நடிகை வர்ஷினி வெங்கட். சினிமாவில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தவர், 'சொட்ட சொட்ட நனையுது' முதலான சில படங்களிலும் லீட் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ், சினிமா என முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை சென்னையில் கைதுசெய்யப்பட்டது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``நண்பராக அறிமுகமான இளைஞர் ஒருவரிடம் 'குறும்படம் எடுக்கலாம்' எனச் சொல்லி ஐந்து லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் படம் எடுத்ததாகவோ அல்லது அந்த முயற்சியில் அந்த இளைஞரும் பங்கு கொண்டதாகவோ தெரியவில்லை. ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த இளைஞர், பணத்தை திருப்பிக் கேட்க, தட்டிக் கழித்த வர்ஷினி, மேலும் பணம் கேட்டுள்ளார். வர்ஷினி வெங்கட் இதனால் அந்த இளைஞருக்கும் வர்ஷினிக்கும் இடையில் தகராறு முற்ற, அந்த இளைஞரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் வர்ஷினி. பேச்சுவார்த்தைக்குச் சென்ற இளைஞரை வர்ஷினியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்த்து தாக்கியதாகத் தெரிகிறது. மேலும் அவரிடமிருந்து 2 செல்போன்கள், ரொக்கப் பணம் ஐம்பதாயிரத்தையும் அப்போது வர்ஷினியுடன் இருந்த ஆட்கள் பறித்துக் கொண்டதாகவும் அந்த இளைஞர் கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், தற்போது வர்ஷினியைக் கைதுசெய்திருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/television/ex-biggboss-contestant-varshini-arrested-on-financial-allegation-complaint




