சென்னை, அரிய வகை குரங்கு விவகாரத்தில் இன்று நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் விக்ரமிற்கும் லார் கிப்பான் குரங்கு விற்பனைக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. குரங்குடன் விளையாடும் வீடியோ நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாள்களுக்கு முன் குரங்குடன் விளையாடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். லார் கிப்பான் என்ற வகை குரங்கான அது சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? அந்த குரங்கை வளர்க்க அனுமதி பெறப்பட்டதா? என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கினார். விக்ரமின் உறவினர் தொடர்ந்து வனத்துறை மேற்கொண்ட விசாரணையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்த குரங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர். ஆவணங்களின்படி, மணிப்பூரைச் சேர்ந்த லைகுரம் சிங் என்பவர் 2020 ஆம் ஆண்டில் 'பரிவேஷ் 1' என்ற தளம் மூலம் 8 லார் கிப்பான்கள் (4 ஆண், 4 பெண்) தன்னிடம் இருப்பதாக பதிவு செய்துள்ளார். அவற்றின் பூர்வீகம் மலேசியா என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், 'உயிருள்ள விலங்கு இனங்கள் விதிகள் 2024'-ன் படி, படிவம்-I மூலம் லைகுரம் சிங்கிடமிருந்து ஈரோடு பெருந்துறையை சேர்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு 3 லார் கிப்பான்கள் (1 ஆண், 2 பெண்) 'தத்தெடுப்பு' என்ற பெயரில் ஜூன் 5, 2026 அன்று கைமாறியுள்ளதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது. ஆனால், படிவம்-1 தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளது. வனவிலங்கு காப்பாளர் மற்றொரு படிவம்-I மூலம், ஆகஸ்ட் 5, 2026 அன்று கேசவநாதனிடமிருந்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணா ரங்கநாதன் (விக்ரமின் சம்பந்தி) என்பவருக்கு 'வளர்ப்புப் பிராணி' தேவையின் பெயரில் 'வாங்கும்' முறையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் லார் கிப்பன் கைமாறியுள்ளது. இந்த படிவம்-1 ஒப்புதலும் தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் நிலுவையில் உள்ளது. ஆனால், விக்ரமுடன் வீடியோவில் இருந்த குரங்குக்கு 2-3 வயது இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளதால் மலைகுரம் சிங்கிடமிருந்து வாங்கியதாக இருக்க வாய்ப்பில்லை என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்பு இல்லை இந்தநிலையில், அரிய வகை குரங்கு விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் விக்ரமிற்கும், லார் கிப்பான் குரங்கு விற்பனைக்கும் தொடர்பு இல்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்களை வைத்திருந்த போதும் அதை பதிவு செய்யாமல் இருந்த கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-vikram-has-no-connection-to-the-rare-monkey-case-forest-department-statement




