Vollständiger Artikel
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன... முக்கிய முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. அப்படி நேற்றைய சந்திப்பில் ஈரான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்கலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான லைசன்ஸையும் ஈரானுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா. இந்த லைசன்ஸ் வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி வரை செல்லுபடியாகும். ஈரான் - அமெரிக்காஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்! ஏன் இந்த நகர்வு? போரை நிறுத்துகிறோம் என்று அமெரிக்காவும், அணுசக்தி ஆயுத தயாரிப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தையும், பேச்சுவார்த்தையையும் இன்னும் நம்பகமாக மாற்ற அமெரிக்கா இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவிற்கு ப்ளஸ்? எது எப்படியோ, ஈரான் எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவது இந்தியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ். இந்தியா கிட்டத்தட்ட 90 சதவிகித எண்ணெயை இறக்குமதி தான் செய்கிறது. இப்போது ஈரான் போரினால் இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா தடையினால் ஈரான் எண்ணெயை வாங்குவது சிரமமாக இருந்தது. இந்தப் போரின் இடையில் அமெரிக்கா ஈரான் எண்ணெய் வாங்க சில விலக்குகள் தந்தாலும், அதில் சில கட்டுப்பாடுகள் இருந்தது. அதனால், அது இந்தியாவிற்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. இப்போதைய அமெரிக்க அறிவிப்பு இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதியில் மிகவும் உதவ உள்ளது. இந்தியா"பாகிஸ்தானில் 'இந்த' அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது போர் தொடுப்போம்" - பாக்., எச்சரிக்கை இருந்தாலும்..! 2018-ம் ஆண்டுக்கு முன்பு, ஈரான் தான் இந்தியாவின் டாப் எண்ணெய் சப்ளையராக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் தடையால் இது தடைப்பட்டது. இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தாலும், ஈரானிடம் இருந்து இந்தியா உடனடியாக எண்ணெயை வாங்கிவிட முடியாது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கான நடைமுறைகள் தெளிவாக வேண்டும். இது தற்காலிக லைசன்ஸ் மட்டுமே. அதனால், இது இந்தியாவிற்கு நீண்ட காலத்தில் பயனளிக்கும் என்று கூற முடியாது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständiger Artikel — Link unten



