கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் யோவரி முசவேனி (வயது 81). இவர் தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். யோவரி முசவேனி கடந்த 1986ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக உகாண்டாவின் அதிபராக செயல்பட்டு வருகிறார். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்ற யோவரி முசவேனி தொடர்ந்து 7வது முறையாக உகாண்டா அதிபராக செயல்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதி இதனிடையே, உகாண்டா எதிர்க்கட்சி தலைவர் கிசா பெசிகி (வயது 70). அவரை தேசதுரோக வழக்கில் உகாண்டா அரசு கடந்த 2024ம் ஆண்டு கைது செய்தது. கிசா பெசிகி கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிசா பெசிகி கடந்த புதன்கிழமை விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கோர்ட்டு வளாகத்தில் வைத்தே கிசா பெசிகி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை உடனடியாக தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட கிசா பெசிகிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/detained-ugandan-opposition-leader-besigye-in-intensive-care-wife-says




