சென்னை, தவெக ஆட்சி இடையூறின்றி தொடர வேண்டும். தவெக அரசுக்கு, விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என திருமாவளவன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜயை சந்தித்தபின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தவெக ஆட்சி வெற்றிகரமாக 100 நாட்களை கடந்திருக்கிறது. முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தோம். 5 ஆண்டுகள் இடையூறு இல்லாமல் தவெக ஆட்சி தொடர வேண்டும். கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சியில் இருக்கிறோம். தவெக அரசுக்கு, விசிக எப்போதும் உறுதுணையாக இருக்கும். சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை உள்ளிட்டவை அடங்கிய தமிழ்த் தேசியம் மாநாடு முக்கியமானது. மாநில சுயாட்சி ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 125 தீர்மானங்களை முதல்-அமைச்சரிடம் வழங்கினோம் மேகமலை, அமுதன் கொலை விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு கட்சியோ, ஆட்சியோ மட்டும் பொறுப்பல்ல.அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. மேகமலை தீர்ப்புக்கு எதிராக தாமதமின்றி சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன். தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்திற்கு நன்றி. தற்போதைய தவெக ஆட்சியுடன் திமுக ஆட்சியை ஒப்பிடுவது தேவை இல்லாதது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvkrule-should-continue-without-interruption-thirumavalavan-interview



