நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தின் ரசுவா எல்லைக்கு அருகே அமைந்துள்ள நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி கிராமத்தில், பெருவெள்ளத்தால் சீறிப்பாய்ந்து வந்த சேறும் சகதியும் பல கட்டிடங்களை அடியோடு மூடியுள்ளன. நேபாள் வெள்ளம் அப்பகுதியில் காவல்துறை நடத்திய ட்ரோன் சோதனையின் போது, சேற்று வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஒரு மூன்று மாடி கட்டிடத்திற்குள் ஒருவரது சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து கிடைத்த தகர ஷீட்டுகள், மரக்கட்டைகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி, சகதி நிறைந்த ஆபத்தான வழியில் தற்காலிகப் பாதை அமைத்து அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அங்கு சென்ற மீட்புக் குழுவினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் 12 பெண்கள், 11 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி என மொத்தம் 24 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பல உடல்கள் உறைந்துபோன சேற்றுக்குள் புதைந்திருந்ததால், மண்வெட்டி மற்றும் கடப்பாரை கொண்டு கடினமாகப் போராடியே உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கட்டிடம் பகுராம் அவஸ்தி என்பவருக்குச் சொந்தமானது. அதன் தரைதளத்தில் 'உத்தரகாயா மினி மார்ட்' என்ற அத்தியாவசியப் பொருட்கள் அங்காடி இயங்கி வந்தது. நேபாள் வெள்ளம் வெள்ளம் சூழ்ந்தபோது பாதுகாப்பு தேடி மக்கள் இந்த பெரிய கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்தனரா, அல்லது அங்காடிக்கு வந்த வாடிக்கையாளர்களா, அல்லது வெள்ளத்தின் பெருக்கெடுப்பில் அடித்து வரப்பட்டு கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. நுவாகோட் காவல் கண்காணிப்பாளர் பிபின் ரெக்மி, ``நாங்கள் ஆய்வு செய்ய முடிந்த பகுதிகளில் இருந்து மட்டுமே 24 உடல்களை மீட்டுள்ளோம். கட்டிடத்தின் சில பகுதிகளை இன்னும் அடைய முடியவில்லை, அங்கேயும் சோதனைகள் தொடர வேண்டியுள்ளது" என வேதனையுடன் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. Nepal Flood: நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/accidents/24-bodies-were-recovered-from-a-single-building-following-floods-in-nepal



