திருநெல்வேலி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மின்பகிர்மான கோட்டங்களுக்கு உள்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் காலை 11 மணியளவில் பின்வருமாறு மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் என திருநெல்வேலி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சார வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8.9.2026 இரண்டாவது செவ்வாய்கிழமை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 11.9.2026 இரண்டாவது வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 15.9.2026 மூன்றாவது செவ்வாய்கிழமை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 18.9.2026 மூன்றாவது வெள்ளிக்கிழமை தென்காசி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22.9.2026 நான்காவது செவ்வாய்கிழமை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 25.9.2026 நான்காவது வெள்ளிக்கிழமை கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலத்திலும், 29.9.2026 ஐந்தாவது செவ்வாய்கிழமை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் காலை 11 மணியளவில் மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-board-grievance-redressal-day-meetings-in-tirunelveli-tenkasi-supervising-engineer-information




