கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் 'டோரதி' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் வெளியீட்டை ஒட்டி, கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவைப் பேட்டி கண்டிருக்கிறார். இந்தப் பேட்டியின் காணொளி சோனி மியூசிக் சவுத் சேனலில் வெளியாகியிருக்கிறது. Dorothy Movie Poster இந்தப் பேட்டியில், நாடகத்தில் நடிக்கும்போது பாரதிராஜா தனது சட்டையை வாங்கி அணிந்துகொண்டு நடித்தது பற்றிப் பகிர்ந்திருக்கிறார் இளையராஜா. அவர் பேசுகையில், "பாரதிராஜா நடித்த 'பூட் மேக்கர் பி.ஏ' என்கிற நாடகத்துக்கு நான் இசையமைத்தேன். ஒரு கிராமத்தில் அந்த நாடகம் நடைபெற்றதால், நாடகம் நடைபெறும் மேடையின் அருகிலேயே திரையைப் போட்டு மறைத்து நாங்கள் மியூசிக் வாசிப்போம். இந்த நாடகத்தின் பெயர்தான் 'பூட் மேக்கர் பி.ஏ'. ஷூவுக்கு பாலிஷ் போடும் கதாபாத்திரம்தான் அந்த நாடகத்தில் முதன்மையானது. நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென என்னிடம் வந்த பாரதிராஜா, 'சட்டையைக் கழற்றிக் கொடு. நாடகத்துக்கு வேற டிரெஸ் போடணும். என்கிட்ட டிரெஸ் இல்லடா' எனக் கேட்டார். நானும் சட்டையைக் கொடுத்துவிட்டேன். பிறகு, 'நாளை இதே சட்டையைப் போட்டுக் கொண்டுதானே நாம் நடந்து போக வேண்டும்? பாரதிராஜாவின் சட்டையை நான் அணிந்துகொண்டு வருகிறேன் எனப் பார்ப்பவர்கள் நினைத்துவிடுவார்களோ' என யோசனையாக இருந்தது. அவர் நடிக்கும்போது, என்னுடைய கவனம் அந்தச் சட்டையிலேயேதான் இருந்தது. பிறகு, அந்தக் காட்சி முடிந்ததும் சட்டையைக் கொடுத்துவிட்டார். இளையராஜா அடுத்தக் காட்சியில் அவரின் கதாபாத்திரம் ஷூ பாலிஷ் செய்து கொண்டிருக்கும். நான் அப்போது அந்தச் சட்டையை அணிந்துவிட்டு நாடக மேடைக்குச் சென்றுவிட்டேன். அங்குச் சென்று பாரதிராஜாவிடம் 'எனக்கு பாலிஷ் போடு' என்றேன் (சிரித்துக் கொண்டே.). அவர் உடனே, 'நீ ஏன்டா வந்த' எனக் கேட்டார். நான் அவரிடம், 'நாளைக்கு இந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு போகும்போது, உன் சட்டை எனச் சொல்லிவிடுவார்களே.' எனச் சொல்லிக் கொண்டு என் செருப்புக்கு பாலிஷ் போடச் சொன்னேன்." என நகைச்சுவையாகப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/kollywood/dorothy-movie-karthik-subbaraj-interview-ilaiyaraaja-bharathiraja




