திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 78 ஆயிரத்து 057 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 406 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக அதிகபட்சம் ரூ.4 கோடியே 15 லட்சம் கிடைத்தது. அன்று 4 லட்சத்து 62 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்றனர். நேற்றைய நிலவரப்படி திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக் சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி சிலாதோரணம் அருகில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் இலவச சாமி தரிசனம் சென்ற பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/tirupati-temples-single-day-hundi-offering-stands-at-415-crore




