புதுடெல்லி டெல்லி ஐ.ஐ.டி.யின் 6-வது தளத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லி ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. இயற்பியல் படிப்பை படித்து வந்த 31 வயது மாணவர் ஒருவர் இன்று காலை 8 மணியளவில் கல்வி மையத்திற்கு வந்துள்ளார். வளாகத்தின் முக்கிய நுழைவு வாயிலின் வழியே சொற்பொழிவாளர் அறை வளாகத்திற்கு சென்றார். 6-வது தளம் இதன்பின்னர் லிப்ட் வழியே 6-வது தளத்திற்கு சென்றார். இதன்பின்னர் 6-வது தளத்தில் இருந்து கீழே குதித்து அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் 8.33 மணியளவில் கல்வி மையத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றினர். எனினும், அந்த மாணவரின் உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் இல்லை. தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மொபைல் போன் ஒன்றை மாணவரிடம் இருந்து போலீசார் கண்டெடுத்தனர். அவருடைய கவுன்சிலிங் பதிவுகள் மற்றும் பிற முக்கிய விசயங்களை கல்வி மைய நிர்வாத்திடம் இருந்து பெற்று அதனடிப்படையில் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/iit-delhi-student-dies-by-suicide-jump-from-sixth-floor




