சென்னை, துணி உலர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணி உலர்த்துவதில் தகராறு சென்னை நன்மங்கலம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் புருசோத்தோமன். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 47). இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அதற்கு அருகிலுள்ள குடியிருப்பில் விஜி (வயது 45) என்ற பெண்ணும் வசித்து வருகிறார். கடந்த மாதம் 21-ந்தேதி அன்று மஞ்சுளா தனது குடியிருப்பின் வாகன நிறுத்த பகுதியில் உள்ள கொடியில் துவைத்த துணிகளை காயப் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த விஜி, மஞ்சுளா போட்டிருந்த துணிகளை எடுத்து தள்ளி போடுமாறு கூறி அவரது துணியை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில் விஜி, அங்கிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த தலைக்கவசத்தை எடுத்து மஞ்சுளாவின் தலையிலும் முகத்திலும் சரமாரியாக தாக்கி உள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து சரிந்து விழுந்த மஞ்சுளாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் விசாரணை இது குறித்து தகவல் அறிந்த மேடவாக்கம் போலீசார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள விஜியை தீவிரமாக தேடி வருகின்றனர். துணி காயப்போடுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-beaten-to-death-with-helmet-over-clothes-drying-dispute




