நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ‘உங்களின் ஹலமிதி ஹபிபோ’ என கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ‘ஜனநாயகன்’ படம் வெளியாகியுள்ளதால் டைட்டில் கார்டில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என வெளியானது. இதில், அவர் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த சைகையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ரிலீஸ் தேதி இங்கே. கடைசியாக ஒருமுறை, கடைசி ஆட்டம். உங்களின் ஹலமிதி ஹபிபோ. கல்யாணி மற்றும் வெற்றி” என கூறியுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் பூஜா ஹெக்டே கல்யாணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் பூஜா ஹெக்டே ‘ஹலமிதி ஹபிபோ’ என்ற பாடலும் நடனமாடியிருப்பார்கள். இந்தப் பாடலும் நடனமும் மிகவும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/one-last-time-one-last-game-pooja-hegde-shares-jananayagan-film-photos




