தூத்துக்குடி, தங்க நகை விவகாரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்ற புகாரில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா இன்று கைது செய்யப்பட்டார். இதனால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா (வயது 42). இவர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள பிரபல 'வேலவன் ஹைப்பர் மார்க்கெட்' கடையில் நபர் ஒருவர் தங்க நகை வாங்கியுள்ளார். அந்த நகையில் அதிக அளவில் வேறு உலோகம் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நகை வாங்கிய நபருக்கு ஆதரவாக கட்சி தலைவர் இசக்கி ராஜா, வேலவன் மார்க்கெட் உரிமையாளரிடம் பேசியுள்ளார். அப்போது நகைக்கு உண்டான தொகையான ரூ.4,22,000-ஐ அவர் வாங்கியுள்ளார். ஆனால், அத்துடன் விடாமல் மார்க்கெட் உரிமையாளரை மிரட்டி கூடுதலாக ரூ.1 கோடி மாமுல் தர வேண்டும் என்றும், தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடவடிக்கை இந்த மிரட்டல் சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சார்பில் வணிகர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை 3-வது மைல் பகுதியில் உள்ள இசக்கி ராஜாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். 15 நாட்கள் வரை சிறை கைதான இசக்கி ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இசக்கி ராஜா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, கைது செய்யப்பட்ட இசக்கி ராஜாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து, போலீசார் இசக்கி ராஜாவை பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/complaint-over-rs-1-crore-extortion-threat-in-thoothukudi-pasumpon-makkal-katchi-leader-izzakki-raja-arrested




