தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு என்ற படத்தின் டீசர் வெளியானது. இப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ். இவர் கடந்த 2014-ல் வெளியான ‘முகுந்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். லோபர், பிதா, எப்2 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகை லாவண்யா திரிபாதியை 2023ல் திருமணம் செய்தார். வருண் தேஜ் நடிப்பில் வெளியான ‘மட்கா’ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருண் தேஜின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கொரியன் கனகராஜு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார். இதனை பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஸன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்திய - கொரியன் பாணியிலான நகைச்சுவை கலந்து ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரித்திகா நாயக் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், வருண் தேஜ் நடித்துள்ள ‘கொரியன் கனகராஜு’ படத்தின் டீசர் வெளியானது. இப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/varun-tejs-korean-kanagaraju-film-teaser-out




