வார விடுமுறையோடு விநாயகர் சதுர்த்தி விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பணிபுரியும் இடங்களான சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் உற்றார் உறவினர்களை சந்தித்து விட்டு விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து ரெயில் மற்றும் பஸ்களில் ஏறி அவர்கள் பயணம் செய்தனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்காக மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதுநெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் முழுமையாக இருக்கைகள் நிரம்பிய நிலையில் அந்த ரயிலில் உள்ள பொதுப்பட்டிகளில் ஏராளமான பயணிகள் முண்டியெழுத்து ஏறி பயணம் செய்தனர் மேலும் நாகர்கோவில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்படும் முழுவதும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரெயியில் பயணிக்க 3-வது நடைமேடையில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். மாலை 5.05 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்து சேர்ந்த அந்தியோதயா ரெயிலில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இடம் கிடைக்காதவர்கள் நின்று கொண்டும் தரையில் அமர்ந்தும் பயணித்தனர். கட்டணம் குறைவு குறித்த நேரத்தில் சென்னை சென்று சேர்ந்து விடலாம் உள்ளிட்ட காரணங்களால் பேருந்துகளை விட மக்கள் அதிக அளவில் ரயில்களை பயன்படுத்தப்பட்டனர் கூடுதல் ரெயில்கள் விழாக்காலங்களில் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பஸ் நிலையம் இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது அங்கிருந்து சென்னை பெங்களூர் கோவை திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகளில் மற்றும் அரசு பஸ்களில் பயணிகள் போட்டி போட்டு ஏறிச் சென்றனர் மேலும் மதுரைக்கும் அதிக அளவு பயணிகள் பஸ்களில் ஏறி பயணம் செய்தனர் இதை வட்டி நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/end-of-long-holiday-crowds-of-passengers-thronged-trains-and-buses




