சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. க்ராண்ட் ஹோட்டலில், ஆண்டுதோறும் நடைபெறும் CSR நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக - இந்த ஆண்டும் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிறுவனங்களுக்கு ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிதியுதவி வழங்கியது. இதன் கீழ், சங்கர நேத்ராலயாவின் இரண்டாவது தளக் கட்டடப் பணிக்காக ₹1.75 கோடி வழங்கப்பட்டது. ஆர்ய வைஸ்யா எஜுகேஷன் சாரிட்டபிள் டிரஸ்டுற்கு கல்வி உதவித்தொகைகளை ஆதரிக்கும் வகையில் ₹10 லட்சம் வழங்கப்பட்டது. திருநகரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளியின் கட்டடப் புதுப்பிப்பு பணிகளுக்காக ₹20 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், சுயம் சாரிட்டபிள் டிரஸ்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுமானம் மற்றும் பள்ளிக் கட்டடப் புதுப்பிப்பு பணிகளுக்காக ₹28 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நான்கு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ₹2.33 கோடி மதிப்பிலான மொத்த நிதியுதவி, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனங்களின் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸின் CSR முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. இந்த முயற்சி குறித்து ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது: "சமூகத்திற்குத் திரும்பிக் கொடுப்பது என்பது எங்களுக்கு எப்போதாவது செய்யும் ஒரு செயலல்ல; அது எங்கள் அன்புத் தந்தையும், ஜி.ஆர்.டி. குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான திரு. ஜி. ராஜேந்திரன் அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த உயரிய மரபாகும். நானும் எனது சகோதரரும் ஆண்டுதோறும் அந்த மரபைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருப்பது எங்களுக்குப் பெரும் பாக்கியமாகும். இறைவனின் அருளால், இந்த உயரிய பணியை வருங்காலங்களிலும் தொடர்ந்து மேற்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களின் வளர்ச்சி, எங்கள் பயணம் முழுவதும் எங்களுக்கு ஆதரவளித்த சமூகங்களின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் போதுதான் அது உண்மையான அர்த்தத்தைப் பெறுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார். ஜி.ஆர்.டி மேலும் இதுகுறித்து, ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது: "எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பும் நம்பிக்கையும் தான் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் இன்று 68 ஷோரூம்களைக் கொண்ட நிறுவனமாக வளர காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், எங்கள் முதல் நாளில் இருந்த அதே பணிவுடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நாட்களையும் நாங்கள் தொடர்ந்து அணுகி வருகிறோம். எங்கள் பயணத்தின் ஓர் அங்கமாக இருந்து வரும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் எங்களுடன் இணைந்து பயணித்த ஒவ்வொருவரிடமும் - நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த நன்றியை சமூகத்திற்குத் திரும்பிக் கொடுக்கும் விதமாகவும், மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கி வரும் நிறுவனங்களுக்கு துணை நிற்கும் வகையிலும்; எங்களின் CSR முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்." என்று கூறினார். இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நேர்த்தியான கைவினைத்திறன், தரத்தில் எவ்வித சமரசமும் இல்லாத அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சேவை ஆகியவற்றின் மூலம் தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. நகைத்துறையில் தனது சிறப்புமிக்க பாரம்பரியத்தைத் தாண்டி, சமூக நலன் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பை முன்னிறுத்தும் பல அர்த்தமுள்ள சமூகப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது, தென்னிந்தியாவில் 67 மற்றும் சிங்கப்பூரில் 1 என மொத்தம் 68 ஷோரூம்களைக் கொண்டுள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ்; தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான நகைகளை, வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப வழங்கி வருகிறது. சமூகத்திற்குத் திரும்பிக் கொடுப்பதற்கான தனது நீண்டகால உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, சமூகத்தில் நீடித்த நன்மை பயக்கும் வகையில்; ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் 'நிறுவனத்தின் CSR முயற்சிகள்' மூலம், சமூக நலனுக்கான தனது அர்ப்பணிப்பை ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மீண்டும் உறுதுப்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/sponsored/sponsor-content/grt-jewellers-csr-activities-2026



