கோவில்பட்டி, தி.மு.க. பொதுக்கூட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருணாநிதி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எலும்புகள் இருக்காது. கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய். சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய். சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம் என்று முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார். முதல்-அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கைது இந்த நிலையில், முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபப்டுவார் என்று தெரிகிறது. விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-mla-arrested-for-threatening-cm-vijay




