சென்னை, -சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஞாயிற்றுக் கிழமையும் ரெயில் சேவைகள் ரத்தான நிலையில், 2ஆவது வாரமாக இன்றும் ரத்து செய்யப்பட்டது. சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் வழித்தடத்தில் இன்று 2-வது வாரமாக பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், அரக்கோணம் மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில்கள் ரத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ரெயில்கள் ரத்து என தெரிவித்திருந்த நிலையில், முன்னதாகவே பயணத்தை முடித்துக் கொள்ளும் நோக்கில் ஏராளமானோர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் பெருந்திரளான மக்கள் கூடியதால், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் நடைமேடைகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வார விடுமுறை நாளில் புறநகர் rஎயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். எனினும், பயணிகளின் சிரமத்தைக் குறைக்க தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்டம் தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல திரிசூலம் மெட்ரோவில் இருந்து சென்னை சென் டிரல் ரெயில் வரை பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதேபோன்று சொந்த வாகனத்திலும் ஏராளமானோர் பயணித்து வருவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பயணிகளின் வசதிக்காக கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/tamilnadu-election-2026-webstories/week-2-chennai-beach-tambaram-train-services-cancelled-passengers-suffer




