தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் கடைவீதியில் மதுபோதையில் கையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுப் பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓட்டுநர், தொழிலாளி தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சமுத்திரம் (வயது 40), தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதே ஊரின் வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்(33), கூலித்தொழிலாளி. கடைவீதியில் அரிவாளுடன் ரகளை நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலையில் அதிக மதுபோதையில் கிராமத்தில் உள்ள கடைவீதிக்குச் சென்றுள்ளனர். அப்போது 2 பேரும் கைகளில் அரிவாள்களை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த கடைவீதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. 2 பேர் கைது இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியா, சப்-இன்ஸ்பகெ்டர் காந்திராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கே பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமுத்திரம், மகேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் அடைப்பு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/two-arrested-for-drunken-brawl-with-sickles-on-shopping-street



