‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை எனக்கு நினைவூட்டியது என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ கடந்த ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியிருந்தார். சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு, தமிழ் இரண்டிலும் நன்றாக சென்ற இப்படம் ரூ260 கோடி வசூல் செய்து அசத்தியது. பேட்டி ஒன்றில் நடிகர் சிவராஜ் குமார் “சமீபத்தில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் பார்த்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்தப் படம் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நினைவுபடுத்தியது. படத்தைப் பார்த்துவிட்டு படுத்திருந்தபோது, அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. சில உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒருநாள் இதுபோன்ற ஒரு படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என பேசியுள்ளார்.: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/couldnt-sleep-after-watching-vishwanath-sons-actor-sivarajkumar




