கின்ஷாசா, காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் தலைநகர் கின்ஷாசா நகரில் லிங்வாலா பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து - 22 பேர் பலி இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். மேலும், தீ விபத்தில் சிக்கிய பலரை மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 22 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/kango-thiruman-nigazhchiyil-thi-vibathu-22-per-pali




