இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆர்.பிரக்ஞானந்தா GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் (Blitz) 2026 சதுரங்கப் போட்டியில் 35 - 23 என்ற புள்ளிகளை பெற்று இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜவோகிர் சிந்தரோவை வீழ்த்தி இப்போட்டியை வென்றார். இவர் இப்போட்டியில் மற்ற போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி தனது தொய்வற்ற ஆட்டத்தினால் 1.5 புள்ளிகளில் முன்னிலை பெற்றார். பிரக்ஞானந்தா ஒரு ரேபிட்(Rapid) மற்றும் பிளிட்ஸ்(Blitz) போட்டியை வெல்வது இதுவே முதன் முறையாகும். 18 க்கு 12 என்ற புள்ளிகளை பெற்று தனது இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். தனது ஒன்பதாவது சுற்றில் டச்சு கிராண்ட் மாஸ்டர் ஜோர்டன் வான் ஃபாரஸ்டிடம் தோல்வியை சந்தித்தபோதிலும், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். பிரக்ஞானந்தா இதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா கூறியதாவது: ``நான் இன்றைய ஆட்டத்தில் முட்டள்தனமான எந்த மூவ்-களையும் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடைய இரண்டாவது ஆட்டத்தில் அதைத்தான் சரியாக செய்தேன். என்னுடைய ஃபைனல் ரிசல்ட்ஸ் பார்க்கும்போது ஒன்றரை சுற்றுகள் மீதம் இருந்தாலும் அந்த வெற்றி எளிதாக கிடைத்தது போல தோன்றலாம். ஆனால் அந்த நேரம் எனக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. அதைத் தாண்டி வெற்றி அடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், ஆட்டத்தை சமன் செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஆடிய இரண்டாவது ஆட்டத்தின் இறுதியில், ஜவோகிருக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தேன். அவர் கடைசிவரை விடாமுயற்சியுடன் போராடினார். அவருக்கு என் பாராட்டுகள். நான் முட்டாள்தனமான மூவ்களை தவிர்க்க விரும்பினேன். ஆனால், எனது ஆட்டத்தின் தரம் நன்றாக இருந்ததாகவே உணர்ந்தேன். அதனால் ஆட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக தக்கவைத்துக்கொண்டு, தேவையற்ற மூவ்களை தவிர்த்துவிட்டு நிதானமாக ஆடவே முயற்சி செய்தேன். மேலும், ரேபிட் (Rapid) மற்றும் பிளிட்ஸ் (Blitz) பிரிவுகளில் தனித்தனியாக வெற்றி பெற நான் ஆசைப்பட்டேன். அதை என்னால் சாதிக்கவும் முடிந்தது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு, ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில் கிடைத்த முடிவுகள், 'சின்குஃபீல்ட் கோப்பை' (Sinquefield Cup) தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு என்னை தள்ளியது. பிரக்ஞானந்தா ஆனால் இம்முறை, அதே முடிவுகள் சின்குஃபீல்ட் தொடருக்கு முன்பாகவே என்னை மிகவும் சாதகமான நிலையில் இருக்க உதவியுள்ளன. அதில் நான் முன்னேற்றம் கண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்டத்தில் என்னுடைய எனர்ஜி சிறப்பாக இருந்தது" என்றார். முதல் இடத்தைப் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தா பட்டத்துடன் 50,000 டாலர் பரிசுத்தொகையையும், இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜவோகிர் சிந்தரோவ் 40,000 டாலர் பரிசுத்தொகையையும், மூன்றாம் இடத்தைப் பிடித்த வெஸ்லி சோ 30,000 டாலர் பரிசுத்தொகையைப் பெற்றுள்ளார்கள். பிளிட்ஸ் (Blitz) பிரிவின் இறுதி ஒன்பது சுற்றுகளில் பிரக்ஞானந்தா மூன்றில் வெற்றி, ஐந்தில் டிரா (draws) பதிவு செய்து, ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://sports.vikatan.com/r-praggnanandhaa-wins-grand-chess-tour-st-louid-rapid-and-blitz-title




