சென்னை, கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு மார்க்கெட் என்பது சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் பிரதான மார்க் கெட்டாக விளங்கி வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் காய்கறி தேவைகள் அனைத்தும் பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கெட்டால் பூர்த்தி செய்யப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து இரவோடு இரவாக மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்று, அதிகாலைக்குள் தங் கள் கடைகளுக்கு கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைக்கான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். வெங்காயம் விலை இத்தகைய சிறப்பு மிக்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங் காயம் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தாலும் வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்துள்ளதாக அங்குள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். பொதுவாக தினசரி 70 முதல் 80 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வரும் வெங்காய வரத்து 50 லாரிகளாக குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், கடந்த 7-ந் தேதி ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, உருளை விலை இதே போன்று வரத்துக் குறைவு காரணமாக தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து உள் ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி மொத்த விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:- நாட்டு தக்காளி ரூ.18 முதல் ரூ.25 வரை, நவீன் தக்காளி ரூ.40, உருளை கிழங்கு ரூ.15 - ரூ.35, கேரட் ரூ.50 ரூ.70, பீன்ஸ் ரூ.60 - ரூ.80, பீட்ரூட் ரூ.50 - ரூ.60, முட்டைகோஸ் ரூ.20 - ரூ.25, வெண்டைக்காய் மற்றும் வரி கத்திரிக்காய் ரூ.25 -ரூ.30, நாட்டு கத்திரிக்காய் ரூ.30 - ரூ.40, பாகற்காய் ரூ.40 - ரூ.50, புடலங்காய் ரூ.20ரூ.30, சுரக்காய் ரூ.15 - ரூ.25, முருங் கைக்காய் ரூ.25 ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.30 - ரூ.40, பச்சமிளகாய் ரூ.50 - ரூ.60, இஞ்சி ரூ.90 ரூ.180, பூண்டு ரூ.130 ரூ.240, தேங்காய் 5.55.60. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/onion-prices-rise-sharply-in-koyambedu-market




