புதுடெல்லி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாaடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றம் நோக்கி பேரணி இதற்கிடையில், நேற்று முன்தினம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிவதால், டெல்லியில் பதற்றம் அதிகரித்துள்ளது. நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்த நிலையில், மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் வக்கீல் ஒருவர் முறையிட்டார். அப்போது, எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் வக்கீலிடம் தெரிவித்தார். தொடர்ந்து, நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படையும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டே இந்தப் போராட்டம் நடைபெற்றதாக நீதிபதிகளிடம் அந்த வக்கீல் தெரிவித்து வாதத்தை முன்வைத்தார். அப்போது, அவரது பேச்சை நிறுத்திய நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர், "மிக்க நன்றி" என்று பதிலளித்தனர். எங்களுக்கு நேரமில்லை தொடர்ந்து, ஆயுதமற்ற போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தாக்குவதாக விடியோ காணொலிகளை அந்த வக்கீல் சமர்ப்பித்தார். ஆனால், "காணொலிகளை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை பார்க்க எங்களுக்கு நேரமில்லை" எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/attack-on-youth-in-delhi-supreme-court-refuses-to-hear-urgent-case




