சென்னை, ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ந் தேதி தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அரசு நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் த.வெ.க. அரசு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 96 நாட்கள் நிறைவடையும் நிலையில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று நடந்தது. 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.67,452 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. 1 லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களில் போடப்பட்ட தொழில் முதலீடுகளையும் சேர்த்து, த.வெ.க. அரசு பதவியேற்ற 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ரூ.1 லட்சம் கோடி ஈர்ப்பு இதன் மூலம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். 1 லட்சத்து 21 ஆயிரத்து 788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/vetri-tamil-nadu-investors-meet-held-in-chennai-today-chief-minister-vijay-participates




