கரூர், கரூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்ற தமிழக முதல்-அமைச்சர் விஜய், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். தொடர்ந்து சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று மக்களை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். இதற்கிடையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, பள்ளி வளாகங்களில் அரசியல் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-event-at-karur-government-school-broadcast-live-headmistress-suspended




